ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கைகள் நிரம்பியது
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கைகள் நிரம்பியது
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரெயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வரும் 10 ம் தேதி முதல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சிறப்பு ரெயில் என்ற பெயரில் இயக்கப்படும் என்றும் ஆனால் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கியது முதல் மக்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வந்தனர். மேலும் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. சாதாரண டிக்கெட் ரூ.270, மூன்றாம் வகுப்பு ஏ.சி ரூ.700, இரண்டாம் வகுப்பு ஏ.சி.ரூ.1000, முதல் வகுப்பு ஏசி ரூ.1600-க்கு முன்பதிவு செய்யப்பட்டது. பயணிகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu