ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடைபெற்றன. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமினை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். தடுப்பூசிக்கு வருபவர்களுக்கான விசாரணை அறை,தடுப்பூசி அறை, ஓய்வெடுக்கும் அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஈரோடு மாவட்டத்தில் நேற்று மட்டும் 28 நபர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 908 நபர்கள் நோய்ப்பாதிப்புக்கு ஆளானதாகவும், அவர்களில் 13 ஆயிரத்து 483 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 280 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் 5 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக களப்பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்ப்பாதிப்புள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள விரும்புவர்கள் ஆன்லைன் மூலமாகவே அரசு சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என்றும், தனியார் மருத்துவமனைகளும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 15 முதல் 25 நபர்களுக்கு மட்டும் செலுத்தப்படும் இந்தத் தடுப்பூசி இரண்டு முறை செலுத்திக் கொள்ள வேண்டுமென்பதால் முதல் முறை போட்டுக் கொள்ளப்பட்டது குறித்தும் இரண்டாம் முறை போட்டுக்கொள்ள வேண்டிய தேதியையும் செல்போன் மூலம் தெரிவிக்கப்படும் என்றும், ஏனைய தடுப்பூசிகளைப் போல் உடனடியாக செலுத்தக் கூடிய தடுப்பூசி இல்லையென்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என்றார். அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லையென்றும், இருந்தபோதிலும் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்னைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்து பாதுகாப்புடன் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட எல்லைகள் கேரள மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள், கோயம்புத்தூர்,திருப்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உதவியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu