ஈரோடு மாவட்டத்தில் சாரல் மழை

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் மழை இல்லாமல் இருந்தது. சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் ,பவானி ,பெருந்துறை, ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரம் கடும் பனிப்பொழிவு நிலவியது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள், வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் காலை 8.30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் சிரமம் அடைந்தனர். பெண்கள் மழையில் நனைந்திடாத வகையில் குடையைப் பிடித்தபடி சென்றதை காண முடிந்தது. தொடர் சாரல் மழையால் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்தனர். குண்டும் குழியுமான ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இதேபோல் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் மேகமூட்டம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. தாளவாடி, சூசைபுரம், மெட்டல் வாடி, ஓசூர் சிக்கள்ளி, திகனாரை, திம்பம் ஆசனூர் மற்றும் வனப் பகுதிகளில் சாரல் மழையால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதைப்போல் அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu