பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக வழங்க எதிர்ப்பு : திமுக சாலை மறியல்

பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக வழங்க எதிர்ப்பு : திமுக சாலை மறியல்
X

பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதை எதிர்த்து ஈரோட்டில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசின் சார்பில் 2500 ரூபாய் ரொக்கம் உட்பட சிறப்பு தொகுப்புகள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முகாசிபிடாயூர் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் பொங்கல் பொருட்களை நியாயவிலை கடைகளில் வாங்குவதற்காக வீடு வீடாக சென்று அதிமுகவினர் டோக்கன்களை வழங்கியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த திமுகவினர்,அதிமுகவினர் டோக்கன் வழங்குவதை கண்டித்து பெருந்துறை-சென்னிமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து திமுக வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திமுக வினரின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது