பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர்  நிறுத்தம்
X

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் போகத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை முதல் நிறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் ,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் போகத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை முதல் நிறுத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து 120 நாட்களுக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து முதல் போகத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

120 நாட்கள் கடந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது. மீண்டும் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இரண்டாம் போகத்திற்கு அரசு உத்தரவின்படி தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.60 அணியாகவும் நீர் இருப்பு 24 டி.எம்.சி யாகவும் நீர் வரத்து வினாடிக்கு 1244 அணியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது