நடப்பாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டா என முதல்வர் அறிவிப்பார் அமைச்சா் செங்கோட்டையன்

நடப்பாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டா என முதல்வர் அறிவிப்பார் அமைச்சா் செங்கோட்டையன்
X

நடப்பாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டா என முதல்வர் அறிவிப்பார் அமைச்சா் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காராப்பாடியில் சுமாா் ரூ. 60 லட்சம் மதிப்பிலான சாலை மேம்பாட்டுபணிகளை தொடங்கிவைத்தது உட்பட அரசு நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் சாவக்கட்டுபாளையத்தில் தமிழக அரசின் மினி கிளினிக்கையும் சிறப்பு மருத்துவமுகாமையும் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் நடப்பு கல்வியாண்டில் கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வு நடைபெறுமா அல்லது நடப்பாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படுமா என்பதெல்லாம் குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்றார். தமிழக அரசு இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத அளவிற்கு 2000 மினி கிளினிக் அறிவித்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற ஏழை எளிய மக்கள் தங்கள் பகுதியிலேயே மருத்துவ வசதி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி