சொத்துக்களை ஏமாற்றி அபகரித்த உறவினர் மீட்டு தர கோரி எஸ்பி.,யிடம் பெண் மனு

சொத்துக்களை ஏமாற்றி அபகரித்த உறவினர்   மீட்டு தர கோரி எஸ்பி.,யிடம் பெண் மனு
X

உறவினர் சொத்துக்களை அபகரித்து ஏமாற்றி விட்டதாகவும் அதை மீட்டு தர வேண்டுமென ஈரோடு மாவட்ட எஸ்பியிடம், பாதிக்கப்பட்ட பெண் மனு அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட எஸ். பி .அலுவலகத்திற்கு இன்று நம்பியூர், நிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்ற மூதாட்டி உடல்நலம் பாதித்த தனது மகன் சோமசுந்தரத்துடன் ஆம்புலன்சில் வந்து எஸ்.பி. தங்கதுரையை சந்தித்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-எங்கள் வீட்டு எதிர் வீட்டில் எங்களது உறவினர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில் உறவினர் மகன் எனது மாமியார் கருப்பாயி அம்மாளை ஏமாற்றி வீட்டில் இருந்த நகை வங்கி கணக்கில் இருந்த பணம், சொத்து அனைத்தையும் அவரது பெயரில் உயில் எழுதி மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது என்னை மிரட்டினார். இதையடுத்து நான் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தேன். அதன்பேரில் கடந்த 2015-ம் ஆண்டு நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எனது உறவினர் மகன் அனைத்து சொத்துகளையும் திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார்.

ஆனால் இதுவரை அவர் சொத்துக்களை திருப்பிக் கொடுக்கவில்லை. தற்போது எனது மகன் சோமசுந்தரம் உடல்நிலை மிகவும் பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ செலவுக்கு வழி தெரியாமல் நான் தவித்து வருகிறேன். எனது மகனின் வைத்திய செலவிற்காக உறவினர் மகனிடம் சொத்தை கேட்டேன். அதற்கு உறவினர் மகன் என்னையும் எனது மகனையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். எனவே எங்களிடமிருந்து அபகரித்த சொத்துக்களை மீட்டு தர வேண்டும் மேலும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்