கொரனோ காலத்தில் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு உதவி பெறும் சுயநிதி தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு, நாமக்கல் ,திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி பிரைமரி அரசு உதவி பெறும் சுயநிதி தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 288 பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணையை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை செய்து வருகிறார். தமிழகமே வியக்கத்தக்க 3 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகள் குளங்கள் கால்வாய் தூர்வாரப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்க நிதி வழங்கப்பட்டுள்ளது .இதன் மூலம் உயர் கல்வி, மருத்துவ கல்லூரி, கூடுதல் சட்ட கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. படிக்கின்ற இளைஞர்கள் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. அமைதி, மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் இங்கு ஏராளமானோர் தொழில் தொடங்க வருகின்றனர். முதல்வர் பொற்கால ஆட்சியை அமைத்து உள்ளார். இன்னும் 6 மாத காலத்திற்கு பிறகு 5 முதல் 10 லட்சம் மாணவர்களுக்கு இந்த தொழிற்சாலை மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். கொரனோ பரவல் காரணமாக இந்த கல்வி ஆண்டு ரத்து செய்யப்படுமா, அல்லது பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முதலமைச்சர் முடிவு செய்வார் .
கொரனோ காலத்திலும் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் குறித்து என் கவனத்துக்கு வந்ததும் அந்த பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தத் தொகை மாணவர்களுக்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2500 ரூபாய் மனிதாபிமானத்துடன் கொரனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. தேர்தலுக்காக கொடுக்கப்படுகிறதா என்பதை தேர்தல் களத்தில் மக்களிடம் பேசட்டும். இந்தத் திட்டத்தை மக்கள் வரவேற்கிறார்கள்.மக்கள் அவர்களை பார்த்து கொள்வார்கள். தமிழகம் முழுவதும் 2900 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறோம். இன்று ஈரோடு மாவட்டத்தில் 288 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu