ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து பட்டியல் வெளியீடு
பைல் படம்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் வெளியிட்டார்.
அதில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பளார் மேனகா, தேமுதிக வேட்பளார் ஆனந்த் மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து பட்டியல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்…
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்:
சொத்து மதிப்பு – ரூ.3.50 கோடி
இளங்கோவனின் மனைவி – ரூ.7.16 கோடி
குடும்ப சொத்து – ரூ.7.16 கோடி.
இளங்கோவனின் கடன் மதிப்பு -ரூ. 1.29 கோடி
இளங்கோவனின் மனைவி பெயரில் உள்ள கடன் மதிப்பு – ரூ.1.71 கோடி.
குடும்ப கடன்- ரூ.47.55 லட்சம்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு:
சொத்து மதிப்பு-ரூ. 2.27 கோடி
அவரது மனைவி சொத்து மதிப்பு – ரூ.1.78 கோடி.
கடன் மதிப்பு ஏதுமில்லை..
தேமுதிக வேட்பாளர் ஆனந்த்:
சொத்து மதிப்பு – ரூ.14.74 லட்சம்..
வங்கி கடன் – ரூ.2 லட்சம்.
நாம் தமிழர் வேட்பாளர் மேனகா:
சொத்து மதிப்பு – ரூ.9.7 லட்சம்.
மேனகாவின் கணவர் சொத்து மதிப்பு – ரூ.2.69 லட்சம்.
கடன் மதிப்பு ( மேனகா ) – ரூ.4.8 லட்சம்.
மேனாக கணவரின் கடன் மதிப்பு – ரூ.3.53 லட்சம் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu