எஸ்பிஐ-ல் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு..!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா -கோப்பு படம்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ நடப்பாண்டில் 10,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வங்கிப்பணிகளைப் பூர்த்தி செய்யவும், தொழில்நுட்பத் திறனை அதிகரிக்கவும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க இருப்பதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் குறைவில்லா சேவை வழங்கவும், வங்கியின் டிஜிட்டல் சேவையை மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே எஸ்பிஐ வங்கி தொழில்நுட்ப சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அதிக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பத் துறையிலும், பொது வங்கி சேவை பிரிவிலும் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொடக்கநிலை மற்றும் உயர் மட்டத்திலும் சுமார் 1,500 தொழில்நுட்பப் பணியாளர்களை பணியில் சேர்க்க உள்ளதாகவும் எஸ்பிஐ வங்கியின் தலைவர் சி.எஸ்.செட்டி கூறியுள்ளார்.
தொழில்நுட்ப பிரிவில் scientists, data architects மற்றும் network operators போன்ற சிறப்புப் பணிகளில் ஊழியர்களை நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தத்தில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த ஆண்டு 8,000 பேர் புதிதாக சேர்க்கப்படுவார்கள் என்றும், மொத்தமாக சிறப்பு மற்றும் பொதுப்பிரிவையும் சேர்த்து 10,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
2024ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,32,296 ஆக இருந்தது. இதில், கடந்த நிதியாண்டின் இறுதியில் 1,10,116 அதிகாரிகள் வங்கிப்பட்டியலில் இருந்தனர்.
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும், இது தொடர் செயல்முறை என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது வங்கி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. அதற்கு ஏற்ப தொழில்நுட்பமும் மாறுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் என்பது பொதுவான வளர்ச்சியாகவும் தொழில்நுட்பத்தில் அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்துவதாகவும் உள்ளது.தொடர்ந்து எல்லா நிலைகளிலும் பணியாளர்களை மறுசீரமைப்பு செய்து வருகிறோம் என்று வங்கியின் தலைவர் செட்டி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu