அதிமுகதான் ஆட்சி அமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

அதிமுகதான்  ஆட்சி அமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்
X

அமைச்சர் ஜெயகுமார்.

கருது கணிப்புகளை உடைத்து அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் தவறாக போயுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், கருத்து திணிப்புகளாகதான் உள்ளன என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நேற்று வெளியாகியது. நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த முடிவுகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது,' தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாகவே உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற கருத்து கணிப்புகள் தவறான முடிவைதான் கொடுத்துள்ளது. 2011 தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், அது பொய்யாகிப்போனது. 124 தொகுதிகளை தி.மு.க. பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அ.தி.மு.க. 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

அதேபோல, 2016 தேர்தலிலும், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. தொகுதிக்கு 2, 3, 5 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றபோது இதுபோன்ற கருத்து கணிப்புகள் சரியாக அமையாது. எனவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் தவிடு பொடியாகிப்போகும். மீண்டும் அ.தி.மு.கதான் ஆட்சி அமைக்கும் என்றார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி