ஏப்., 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!

ஏப்., 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!
X

பள்ளி மாணவர்கள் (கோப்பு படம்)

லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 19ல் நடப்பதால் வரும் ஏப்., 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. வரும் ஏப்., 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக அனைத்து பள்ளிகளும் ஓட்டுச்சாவடி அமைக்க ஏப்., 13ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 22ம் தேதி நிறைவடைந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி, ஏப்., 8ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. அதன் பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல், தேர்ச்சி அறிக்கை தயார் செய்தல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 26ஆம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகும். இதற்கிடையில் தேர்தல் பணிகளையும் ஆசிரியர்கள் முடித்து விடுவார்கள். பள்ளிகளில் ஓட்டுப்பதிவும் நடந்து முடிந்து விடும். இதற்காக பள்ளிகள் ஏப்., 13ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

பொதுவாக ஓட்டு எண்ணிக்கை ஒரே மையத்தில் தான் நடத்தப்படும். இதற்காக ஏதாவது ஒரு கல்லுாரி வளாகம் தேர்ந்தெடுக்கப்படும். இதனால் பள்ளிகள் குறித்த நேரத்தில் எந்த குழப்பமும் இல்லை. ஆனாலும் கோடை விடுமுறை முடிந்த பின்னரே பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!