சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு

சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு
X

எடப்பாடி பழனிசாமி.

சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தி.மு.க. பிரமுகரை தாக்கியது , நிலஅபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிசாமி மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், ரோட்டை மறித்தல், கொரோனா நோய் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, விஜயலட்சுமி பழனிசாமி, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, சுந்தர்ராஜன், சித்ரா, ஜெய்சங்கர், நல்லதம்பி, எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா