அட கடவுளே..! இந்த நேரத்தில...மின் கம்பத்துல பீஸ் போயிடுச்சா..?

EB Office Complaint Number
EB Office Complaint Number
பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்துவிட்டு வரவேண்டும். லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும். வேலையும் உடனே ஆகணும். அப்படின்னா அவங்கள நமக்கு வேலை வாங்க தெரியணும், இல்லையா..? அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிஞ்சு பயன்படுத்திக்கோங்க...
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் 9498794987 என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின்இணைப்பு எண்ணை தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும். தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சாரவாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார். ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க தேவையில்லை.
ஏன்..? லைன்மேன் வாயைகூட திறந்ததில்லை. அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடுகிறது. இந்த வசதியை பயன்படுத்தும் போது தான் இதன் அருமை உங்களுக்கே தெரியும். ஒருவேளை லைன்மேன் பணம் கேட்டாலும் அந்த சேவைமைய தொடர்பு எண்ணிலேயே அழைத்து தெரிவித்துவிடலாம். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத்தலைநகர் சென்னையிலிருந்து சேவைமைய ஊழியர் அழைத்து மின்சாரவாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்டபிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள் .
இந்த மின்சாரவாரிய சேவைமைய தொடர்பு எண் மின் இணைப்பை சரிசெய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றிபோடுதல் மற்றும் கம்பத்தை மாற்றிபோடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சாரவாரிய சேவைகளை பெறலாம். மின்சாரவாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண்
அதாவது TNEB கஸ்ட்மர் கேர்:9498794987
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu