சென்னையில் வீடு தேடி வரும் மருத்துவ வசதி..! மருத்துவமனையும் வீட்டுக்கே வந்தாச்சு..!

சென்னையில் வீடு தேடி வரும் மருத்துவ வசதி..! மருத்துவமனையும் வீட்டுக்கே வந்தாச்சு..!
X

வீட்டுக்கு நேரில் வந்து  மருத்துவம் செய்யும் மருத்துவர்.-கோப்பு படம் 

சென்னையில் வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது, சென்னை அசோக்நகரில், டாக்டர் மஹாதேவன் என்பவர், டாக்டர் மீனா ராமசுப்பிரமணியன் போன்ற தன்னையொத்த சக டாக்டர்கள் சிலருடன் சேர்ந்து, " டாக்டர் @ ஹோம் (Doctor@home )" என்னும் இணையதள முகவரி மூலமாக, மருத்துவ சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதனால், சென்னையைச் சுற்றி உள்ள நோயாளிகள், லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்து, பெரிய மருத்துவ மனைகளுக்குச் சென்று, உள்நோயாளிகளாக சேர்ந்து, சிகிச்சைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் மஹாதேவனை, இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு, நோயாளி பற்றிய தகவல்களை தெரிவித்தால், தக்க மருத்துவக் குழு, நேரடியாகவே நம் வீட்டுக்கு வந்து, உரிய மருத்துவ சேவையை வீட்டிலேயே செய்து விடுவார்கள்.

குழந்தைகள், வயதானவர்கள், நரம்பு, கான்ஸர் நோயாளிகள் போன்றோர், இனி, மருத்துவமனைக்கும், பரிசோதனைக் கூடங்களுக்கும், தினமும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர்கள், செவிலியர்களுடன் வீட்டுக்கே வருவார்கள். ரத்தப்பரிசோதனையில் இருந்து எக்ஸ்ரே, ஈ சி ஜி போன்ற பரிசோதனைகளையும், நம் வீட்டிலேயே செய்வார்கள். காயங்களுக்கும், புண்களுக்கும் மருந்திட்டுப் பார்த்துக் கொள்வதில் இருந்து, பிராணவாயு செலுத்துவது வரை, வீட்டிலேயே செய்யப்படும். ஆம்புலன்ஸ் சேவை கூட உண்டு. சுருக்கமாகச் சொல்லப் போனால், நம் வீட்டிலேயே, மருத்துவமனை இயங்கும்.

இந்த புதிய முறை சிகிச்சையைப் பெற, 9962370552, 9940451580, 9841383989, 9444787370 எண்களில் ஏதாவது ஒன்றுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
பிஎஸ்என்எல்  வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..இனி ஆடியோ,வீடியோ கால் செய்ய  சிம் கார்டே தேவை இல்லை..!