தமிழக முதல்வர் ஸ்டாலினின் மதிப்பிற்குரிய எதிரி யார் தெரியுமா?

தமிழக முதல்வர்  ஸ்டாலினின் மதிப்பிற்குரிய எதிரி யார் தெரியுமா?
X
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மதிப்பிற்குரிய எதிரியாக அண்ணாமலை வலம் வருவதாக தி.மு.க.வினரே கூறுகிறார்கள்.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் எதிரியை முதல்வர் ஸ்டாலின் எதிர்கொண்டு வருகிறார் என தி.மு.க.,வினரே பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றனர்.

இது குறித்து தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் சிலர் கூறும்போது தமிழக முன்னாள் முதல்வர் காமராஜுக்கு மிகப் பெரிய அரசியல் எதிரியாக இருந்தவர் தி.மு.க.வின் அண்ணா. அண்ணாவுக்கு மிகப்பெரிய அரசியல் எதிரி யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் இந்த விதத்தில் லக்கிமேன் தான். கருணாநிதி முதல்வரான பிறகு அவருக்கு முதல் 4 வருடங்கள் அரசியல் எதிரி என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. அதன் பின்னர் எம்.ஜி.ஆர். என்ற மிகப் பெரிய எதிரி திடீரென்று தோன்றினார்.

எம்.ஜி.ஆருக்கு கருணாநிதி தான் அரசியல் எதிரி. சந்தேகமே இல்லை. ஆனால் எம்.ஜி.ஆரை எதிர்ப்பதில் கருணாநிதி பெரிய ஆவேசம் எதுவும் காட்டவில்லை. இந்த வகையில் எம்.ஜி.ஆரும் ஒரு வகையில் அண்ணா போல் லக்கிமேன் தான். ஆனால் கருணாநிதிக்கு எம்.ஜி.ஆரை விடக் கடுமையான எதிரியாக உருவானார் ஜெயலலிதா. எந்தத் தேர்தலிலும் எம்.ஜி.ஆரைத் தோற்கடிக்காத கருணாநிதி, ஜெயலலிதாவை மாறி மாறித் தோற்கடித்தார். கருணாநிதிக்கு ஜெயலலிதா மிகப்பெரிய அரசியல் எதிரி என்றால் ஜெயலலிதாவிற்கு கருணாநிதி தான் மிகப்பெரிய அரசியல் எதிரி. இரண்டு பேருக்கும் செம டக்கர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் ஒரு எதிரியாகவே இருக்கவில்லை. பழனிச்சாமிக்கு இருந்த ஒரே எதிரி பன்னீர்செல்வம் தான். 2021 மே 7-ஆம் தேதி முதல்வர் பதவியேற்ற போது ஸ்டாலின் மனம் நிம்மதியாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சொல்லிக் கொள்ளும்படியான அரசியல் எதிரிகள் யாருமே ஸ்டாலினுக்கு தமிழகத்தில் இல்லை. இந்தப் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் வெத்து வேட்டு. நம்மை ஒன்றும் செய்ய முடியாது என தி.மு.க.,வினர் கருதினர்.

அந்த வகையில் இனிமேல் நானே ராஜா, நானே மந்திரி. என்னைக் கேள்வி கேட்க யாருமே இல்லை என்று ஸ்டாலின் இருந்த நிலையில் அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தார் முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரிஅண்ணாமலை. இவர் அரசியலுக்கே புதிது. அவரால் நம்மை என்ன செய்ய முடியும்? எனத்தான் தி.மு.க.,வினர் நினைத்தனர். முதல் சில மாதங்கள் இப்படித்தான் போனது. ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று தோன்றுகிறது.காமராஜ் சந்தித்ததை விட, கருணாநிதி சந்தித்ததை விட, ஜெயலலிதா சந்தித்ததை விட, மிகப்பெரிய, மிக வலுவான, மிகத் திறமையான அரசியல் எதிரி ஸ்டாலினுக்கே என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள்.

அந்த அளவு தமிழக அரசியல் களம் அண்ணாமலைக்கும்- ஸ்டாலினுக்கும் கடும் எதிரெதிர் சூழலை உருவாக்கி உள்ளது.

Tags

Next Story
ரூ.2 கோடி மோசடி..! துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது..!