/* */

ஆளுநர் ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்ததன் பின்னணி என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்ததற்கு பின் வேறு பல முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

ஆளுநர் ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்ததன் பின்னணி என்ன தெரியுமா?
X

தமிழக ஆளுனர் ரவி- நடிகர் ரஜினி காந்த்.

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்ததற்கு பின் வேறு பல முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

'என்னுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது. கொரோனா காரணமாக நான் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு இது ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறேன். என்னை நம்பி வந்தவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதால் அரசியலில் நான் பிடிவாதமாக குதிக்க கூடாது. என்னை மன்னித்து விடுங்கள். தேர்தல் அரசியலை தாண்டி என்னால் என்ன செய்ய முடியுமோ செய்கிறேன். மக்களுக்கான சேவைகளை செய்கிறேன்' என்று கூறி அரசியலுக்குள் நுழையும் முன்பே அதில் இருந்து ஓய்வு பெற்றவர்தான் நடிகர் ரஜினிகாந்த்.

இனி அரசியல் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அதே ரஜினிகாந்த் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து "அரசியல்" பேசி இருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த சந்திப்பிற்கு பின் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவரின் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்த காரணத்தால் மொத்தமாக ஆன்மீகம் பக்கம் இவர் நாட்டம் செலுத்துவார் என்றே நம்பப்பட்டது. ஆன்மீகத்திற்கு இவர் சென்றுவிடுவார் என்றே பலரும் நம்பினார்கள். சமீபத்தில் கூட ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் விரக்தியாக பேசி இருந்தார். இவரின் பேச்சு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. துறவி மனப்பான்மையுடன் ரஜினிகாந்த் பேசியது அவரின் ரசிகர்களையே குழப்பத்திற்கு உள்ளாக்கியது. அப்படிப்பட்ட ரஜினி தற்போது அரசியல் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

இவரின் டெல்லி பயணம்தான் இந்த திடீர் அரசியலுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்கிறார்கள். சரியாக 3 நாட்களுக்கு முன்புதான் ரஜினிகாந்த் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற சுதந்திர அமுத பெருவிழா கூட்டம் ஒன்றில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. அல்லாத பல மாநில அரசியல் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ரஜினி சில பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசினார்.

அதேபோல் இந்த கூட்டத்திற்கு பின்பாகவும் சில பா.ஜ.க. தலைகளை நடிகர் ரஜினிகாந்த் தனியாக சந்தித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புதான் ஆளுநர் ரவி - ரஜினிகாந்த் இடையிலான மீட்டிங்கிற்கு வித்திட்டதாக கூறப்படுகிறது. இதில் சில முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கின்றன. முதல் விஷயம் தி.மு.க. தலைவர்களுடன் ரஜினிகாந்த் நெருக்கமாக செல்வதை பா.ஜ.க. விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கோலிவுட்டில் பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் திராவிட சிந்தனையுடன் இருக்கின்றனர். கமல்ஹாசனும் உதயநிதியும் கூட நெருக்கமாகி விட்டனர். ரஜினி தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஆனால் அப்படிப்பட்டவர் செஸ் ஒலிம்பியாட் விழாவில் தி.மு.க. தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்ததை பா.ஜ.க. விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் ரஜினிகாந்தை தங்களுக்கான வாய்சாக பயன்படுத்த பா.ஜ.க. நினைத்து வருகிறதாம். அதாவது நேரடியாக தேர்தல் களத்தில் இறக்காமல் பா.ஜ.க.விற்கு பின்னால் இருந்து வாய்ஸ் கொடுக்கும் நபராக ரஜினிகாந்தை பயன்படுத்த பா.ஜ.க. நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது. டெல்லி சென்ற ரஜினிகாந்திடம், அங்கு நடந்த மீட்டிங்கிலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த சந்திப்பிற்கு பின்பே ஆளுநர் ஆர். என் ரவியை சென்னையில் ரஜினிகாந்த் சந்தித்து இருக்கிறார். ரஜினிகாந்த் சொன்னபடி அரசியலுக்குள் வர மாட்டார். ஆனால் அவர் தமிழ்நாடு அரசியலில் பின்னால் இருந்து இயக்கும் சக்தியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இதைப்பற்றித்தான் ரஜினி - ரவி இருவரும் பேசி உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த் கண்டிப்பாக 'வாய்ஸ்' கொடுப்பார் என்றும் அரசியல் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

Updated On: 12 Aug 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?