12ம் வகுப்பு மதிப்பெண்கள் கூட்டல் சரிதானா என தெரியுமா?

12ம் வகுப்பு மதிப்பெண்கள் கூட்டல் சரிதானா என தெரியுமா?
X

பைல் படம்.

12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மதிப்பெண் கூட்டல் சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

12-ஆம் வகுப்புத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான பின்னர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் சரிதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அவர்களுடைய விருப்பத்தின் பேரில் விடைத்தாள்கள் scanned நகல்கள் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. விடைத்தாள்களின் scanned நகல் பெற்றவர்கள் விரும்பினால் விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

விடைத்தாள் நகல் / மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளிமாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 09.05-2023 (செவ்வாய்கிழமை) காலை 11:00 மணி முதல் 13.05.2023 ( சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்:

ஒவ்வொரு பாடத்திற்கும் - ரூ.275/-

மறுகூட்டல் கட்டணம் :

உயிரியியல் பாடத்திற்கு மட்டும் : ரூ.305/-

ஏனைய பாடங்களுக்கு மட்டுமே : ரூ.205/-

பணம் செலுத்தும் முறை: தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை: விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும், www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil