தி.மு.க., வேட்பாளர் பட்டியல் தயாராவது எப்படி?

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் தயாராவது எப்படி?
X

பைல் படம்.

மாநிலம் முழுவதும் திமுக., வேட்பாளர் பட்டியலை வார்டு வாரியாக ஐபேக் டீமும், தமிழக உளவுத்துறையும் தயாரித்து கட்சி மேலிடத்திடம் வழங்கி உள்ளது.

வார்டு வாரியாக வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை திமுக.,வின் ஐபேக் டீமும், உளவுத்துறையும் இணைந்து தேர்வு செய்து கொடுத்துள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக.,வின் அறுதிப்பெரும்பான்மையான வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திரைமறைவில் பணிபுரிந்த ஐபேக் டீம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே ஐபேக் டீம், தற்போது தமிழக உளவுத்துறையுடன் இணைந்து ஒவ்வொரு வார்டிலும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை தேர்வு செய்து திமுக., தலைமைக்கு கொடுத்துள்ளது.

அதேபோல் இதே டீம் தான் தி.மு.க., வீக் ஆக உள்ள வார்டுகளின் பட்டியலையும் கொடுத்து, அந்த வார்டுகளை கூட்டணிக்கு கொடுத்து விடலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான பங்கீடு தயாராகி வருகிறது. இதனால் தி.மு.க.,வின் இறுதிப்பட்டியல் வெளியாக காலதாமதம் ஏற்படும். வரும் பிப்., 4ம் தேதி திமுக., வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளது என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business