தேர்தல் பிரச்சாரத்தில் திமுக-நாதக இடையே மோதல்: நாதக நிர்வாகி மண்டை உடைப்பு

பைல் படம்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் ஈரோடு இடைத்தேர்தலில் 4 கட்சிகளுக்கிடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் சார்பில் முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மற்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு ராஜாஜிபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பிரிவைச் சார்ந்த அன்பு தென்னரசுவின் மண்டை உடைக்கப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் அங்கு கூடி அன்பு தென்னரசுவை அடித்தரை கைது செய்யஜகோரி நாம் தமிழர் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக சீமானை கைது செய்ய கோரியும் திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்டை உடைக்கப்பட்ட அன்பு தென்னரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu