இன்னும் 60 நாளில் அடுத்த தேர்தல்: வேகமாக தயாராகிறது தி.மு.க.

அண்ணா அறிவாலயம் (பைல் படம்)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சந்தோஷத்தை கொண்டாட முடியாமல் தி.மு.க. பரிதவித்து வருகிறது. காரணம் மாநிலம் முழுவதும் கூட்டணி கட்சியினருக்கு தி.மு.க. கொடுத்த இடங்களை தி.மு.க. நிர்வாகிகளே தட்டிப்பறித்த பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் உள்கட்சி தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க நீதிமன்றத்தில் தி.மு.க., கொடுத்த கெடுவும் முடிவுக்கு வருவதால் மே மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வரும் ஜூன் 3ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூட்டமும் கூடுகிறது. பொதுக்குழுவிற்கு முன்னரே உள்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தி.மு.க., மேலிடம் உறுதியாக உள்ளது.
ஏற்கனவே ஊரக பகுதிகளில் தி.மு.க., உள்கட்சி தேர்தல்கள் முடிந்து விட்டன. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வரும் மே 30ம் தேதிக்குள் உள்கட்சி தேர்தலை நடத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய ஏற்பாடுகளில் தி.மு.க., மேலிடம் இறங்கி உள்ளது.
எனவே வரும் ஏப்ரல் மாதமே தி.மு.க., உள்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி விடும். மே மாதம் தேர்தல் நடத்தி முடித்து விடுவோம் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu