தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் : 2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக..!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் : 2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக..!

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் -கோப்பு படம் 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கு இப்போதே தி.மு.க. திட்டமிடுதலைத் தொடங்கியுள்ளது. . அதற்காக 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் தி.மு.க., இளைஞரணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் வழிகாட்டுதலின்படி, 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்கம் போன்ற தேர்தல் பணிகளை தற்போது நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் மேற்பார்வையிட உள்ளனர்.

தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் பணிகள்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ள 5 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு ஏற்கனவே பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது:

இளைஞரணி

மாணவரணி

மருத்துவர் அணி

விவசாய அணி

தொகுதி பார்வையாளர்களின் பொறுப்புகள்

நியமிக்கப்படும் தொகுதி பார்வையாளர்கள் பின்வரும் பணிகளை மேற்கொள்வார்கள்:

தொகுதியின் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தல்

உள்ளூர் பிரச்சினைகளை கண்டறிதல்

கட்சியின் செல்வாக்கை மதிப்பிடுதல்

எதிர்க்கட்சிகளின் நிலையை ஆராய்தல்

தேர்தல் பிரசார உத்திகளை வகுத்தல் போன்றவை ஆகும்.

தமிழகம் முழுவதையும் இந்த பணிகள் நடக்கவுள்ளது. அதை ஐந்து பேர் கொண்ட இந்த ஒருங்கிணைப்புக்குழு மேற்பார்வை இடும். திட்டமிட்டபடி பணிகள் நடக்கின்றனவா என்பதை பொதுச் செயலாளர் உறுதி செய்வார்.

Tags

Next Story