தஞ்சையில் மாவட்ட குறைகேட்பு முகாமில் பொதுமக்கள் சார்பில் 463 மனுக்கள் அளிப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் தீபக் ஜோக்கப் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பேசியதாவது:
தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர்.
அதனைத் தொடர்ந்து பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு மாணவிக்கு தொழிற் கல்வி பயின்று வருவதற்கான உதவித் தொகை ருபாய் 50,000 காசோலையினை மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 13 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை ஆட்சியர் தீபக் ஜோக்கப் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ர.,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்டகுழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் குளோரிகுணசீலி, மாவட்ட திட்டஅலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவகாப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu