திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, திண்டுக்கல் தெற்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் கூறியிருப்பதாவது,
திண்டுக்கல் துணை மின்நிலையத்தின், தொழிற்பேட்டை உயரழுத்த மின்பாதையில் நாளை (சனிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை
பொன்னகரம், நல்லாம்பட்டி, காவேரிநகர், எம்.ஆர்.எப்.நகர், மாருதிநகர், சமத்துவபுரம், வேடப்பட்டி, யாகப்பன்பட்டி, மருதாசிபுரம், ரெஜினாநகர், ஞானநந்தகிரி நகர், எம்.ஜி. ஆர்.நகர், மொட்டணம்பட்டி ரயில்வே கேட், அந்தோணி நகர், மேட்டுப்பட்டி, சாமிகண்ணு தோட்டம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu