புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட்

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்:   வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட்
X

சஸ்பெண்ட் செய்யப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் சரவணன்.

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம் வாங்கியதாக வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

குஜிலியம்பாறையில் வட்ட வழங்கல் அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சரவணன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த விசாரணையின் அடிப்படையில் அவர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனால்,குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!