சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
X

திண்டுக்கல் நகரில், குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி நடந்தது.

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நத்தம் சாலை சாணார்பட்டி அருகே விராலிப்பட்டியில், சாணார்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று புளிய மரத்தில் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.மற்றொருவர் காயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இது குறித்து, சாணார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகர் பகுதிகளில் ,நேர கட்டுப்பாட்டு மீறி பட்டாசுகளை வெடித்ததாக நகர் வடக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில், தலா ஒரு வழக்கு என மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என, போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. வருகிற 18-ஆம் தேதி சூரசம்ஹாரமும், வருகிற 19-ஆம் தேதி மலைக்கோவிலில் காலை 9.30 மணி அளவில் வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

திண்டுக்கல்லில் நேற்றிரவு வரை 50 டன் பட்டாசு கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.இதுவரை 100 டன் கழிவுகளை அகற்றி திண்டுக்கல் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. இன்று இரவுக்குள் கழிவுகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில், நேற்று 500 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இன்று 400 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil