வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
X
தங்கராஜாவின் மகன் சூரியா டில்லியில் படித்த போது தவறவிட்டஅலைபேசியில் சிறுமிகள் பாலியல் தொடர்பாக வீடியோ இருந்துள்ளன

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்லைன் மூலம் சிறுமிகள் சம்பந்தமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில் வேடசந்துார் மருந்தாளுனர் தங்கராஜா(48)வீட்டில் சி.பி.ஐ., போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். சிறுமிகள் பாலியல் குறித்து வீடியோ பார்த்தது , பதிவேற்றம் செய்தது தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் 83 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் 76 இடங்களில் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் திருப்பூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஆகிய 6 இடங்களில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேடசந்துார் ஆர்.எச்., காலனியை சேர்ந்த இவர், அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக உள்ளார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டுக்கு சி.பி.ஐ., போலீசார் 7 பேர் வந்து சோதனை, மற்றும் விசாரணை நடத்தினர். பிரின்டர், அலைபேசி, மெமரி கார்டுகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். தங்கராஜாவின் மகன் சூரியா டில்லியில் படித்த போது அலைபேசியை தவறவிட்டுள்ளார். அதில் சிறுமிகள் பாலியல் தொடர்பாக வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.அதன் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என தெரிவித்து சென்றுள்ளனர். ஆனால் உள்ளூர் போலீசாருக்கு விசாரணை குறித்து எந்த தகவலும் தரப்படவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!