திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
X

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த மாற்றுத்திறனாளி.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கே.ராஜதானி கோட்டை, சேர்ந்த துரைப்பாண்டி மாற்றுத்திறனாளி. இவரது விவசாய நிலத்திற்கு செல்லும் வழியை சிலர் மறித்து உரிமை இல்லை என்று பிரச்சினை செய்து வருகின்றனர். இதுகுறித்து, காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்று கூறி ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்தனர். இதை அடுத்து ஆட்சியிடம் மனு அளித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ் பாபு என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!