மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் தீவைத்து எரிக்கப்பட்ட தாய் ஆபத்தான நிலையில் அனுமதி

மனநலம் பாதிக்கப்பட்ட மகனால்  தீவைத்து எரிக்கப்பட்ட  தாய் ஆபத்தான நிலையில் அனுமதி
X
கடந்த ஒரு வருடமாக இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர்

திண்டுக்கல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன் அவரது தாய் வெட்டி தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கினறனர். தாய் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தென்னம் பட்டியை சேர்ந்த சுப்பிரமணி இவர் ஆத்தூரில் சர்வேயராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி பஞ்சவர்ணம் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் . இதில் மூத்த மகன் சதீஷ் வயது 27 கடந்த வருடம் வரை தனியார் லாரி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதனிடையே 27.12.21 இரவு தோட்டத்து வீட்டில் இருந்த பஞ்சவர்ணத்தை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் சதீஷ் கத்தியால் குத்தி உள்ளார். இதில் மயக்கமடைந்து பஞ்சவர்ணம் கீழே விழுந்துள்ளார் இதனையடுத்து அவரது உடலில் தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு வந்து பஞ்சவர்ணத்தை ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தற்பொழுது மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!