திண்டுக்கல் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி 14 பேர் காயம்
பைல் படம்
அய்யலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி 14 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி பகுதியில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து ,திருச்சிக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பழுதடைந்ததால், அதனை ஓரமாக நிறுத்த டிரைவர் மெதுவாக ஓட்டிச்சென்றார். நள்ளிரவு சமயம் என்பதால் , பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுனருக்கு லாரி மெதுவாக செல்வது தெரியவில்லை. இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இதில், நிலைதடுமாறிய லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில், நல்லுச்சாமி(49), வள்ளி(52), கிருஸ்ணராஜ்(50), தேவராஜ்(55), ரோஜாவள்ளி, சிவக்குமார், பிரபாகரன், லட்சுமி, பஸ் டிரைவர் கிருஷ்ணராஜ்(55) உள்பட 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு திண்டுக்கல் மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விடுமுறை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை விடுமுறை விடப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்,தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் காய்கறி சந்தை செயல்படாது என்றும் ,விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu