திண்டுக்கல்லில் நடைமேடையில் சுற்றித்திரிந்த இருவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

திண்டுக்கல்லில் நடைமேடையில்  சுற்றித்திரிந்த இருவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
X

பைல் படம்

ரயில் நிலைய நடைமேடைகளில் ஆதரவற்ற நிலையில் யாசகம் வாங்கி சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸார் மீட்டனர்

நடைமேடையில், சுற்றி திரிந்த இருவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் ரயில் நிலைய நடைமேடைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 2 பேரை ரயில்வே காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், திண்டுக்கல் ரயில் நிலைய நடைமேடைகளில் ஆதரவற்ற நிலையில் யாசகம் வாங்கி சுற்றித் திரிந்த சேதுராமன்(43), சக்திவேல்(40) ஆகிய 2 பேரை ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி, சார்பு ஆய்வாளர் பொன்னுச்சாமி, தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் மற்றும் காவலர்கள் பிடித்து ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கி பாரதிபுரத்தில் அமைந்துள்ள நகர்ப்புற வீடுகள் அற்ற ஏழைகள் காப்பகத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!