மகளிர் சுய உதவிக்குழு கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்த பெண்கள் கோரிக்கை

மகளிர் சுய உதவிக்குழு கடன்  வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்த பெண்கள் கோரிக்கை
X
பழனியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடனை பைனான்ஸ் நிறுவனங்கள் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் கிராமங்களில் உள்ள ஏராளமான பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் கடன் பெற்றுள்ளனர். கடன் தவணையை வாரம் ஒருமுறை மற்றும் மாதம் ஒருமுறை என்ற முறைகளில் கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் இழப்பு மற்றும் வேலை இழப்பு ஆகியவை‌ காரணமாக வருமானமின்றி தவித்து வரும் நிலையில் கடன் கொடுத்த நிறுவனங்கள் கடன்தொகையை வசூலிப்பதில் கெடுபிடி காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பழனியை அடுத்துள்ள‌ அ.கலையமுத்தூர் பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள்‌ ஊராட்சி மன்ற‌த் தலைவரிடம்‌ இதுகுறித்து மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள்‌ தெரிவித்தததாவது : கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது கடன்தொகையை வசூலிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா‌ 2வது அலை காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வேலையிழப்பு ஏற்பட்டு கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆனால் கடன் கொடுத்த நிறுவன ஊழியர்கள் பெண்களை தரக்குறைவாக பேசி கடனை செலுத்த வற்புறுத்துவதாகவும் தெரிவித்தனர். வருமானமின்றி குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் இருக்கும் தங்களிடம் கடன்தொகை வசூலிப்பதை சிலநாட்களுக்கு நிறுத்திவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவரிடம் மகளிர்சுய உதவிக்குழு சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள்‌ மனு அளித்தனர்.

Tags

Next Story