சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்படுமா?

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்படுமா?
X

கொடைக்கானல் பெருமாள்மலை, பழனி செல்லும் முக்கிய சாலையில் இருபுறங்களிலும் இடையூறாக நிறுத்தப்படும் லாரிகள்

பெருமாள் மலை, பழனி சாலையை போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று வருவதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை, பழனி செல்லும் முக்கிய சாலையில் இருபுறங்களிலும் லாரிகள் மற்றும் சிறிய வாகனங்களை நிறுத்தி வைத்து பாதைகளை முற்றிலுமாக மறைத்து விடுகின்றனர். அதேபோல், காலையிலும் மாலையிலும் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சாலையில் மறிப்பது போல இடையூறாக நிறுத்தும் வாகன ஓட்டிகளிடம் ஓரமாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால், பேசுவதாகவும் சண்டையிடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாலையில், இருபுறம் நிறுத்தப்படும் வாகனங்களை காவல்துறையினர் வேறு இடத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் .

அதேபோல், பொதுமக்களிடமும் சுற்றுலா பயணிகளிலும் சண்டையிடும் வாகன ஓட்டிகளை எச்சரித்து, பெருமாள் மலை, பழனி சாலையை போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று வருவதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!