விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌த்துக்கு அனும‌தி கோரி உண்ணாவிரதப்போராட்டம்

விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌த்துக்கு அனும‌தி  கோரி  உண்ணாவிரதப்போராட்டம்
X
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள், விநாயகர்சதுர்த்தி விழாவுக்கான தடையை நீக்கக்கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன

கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சியினர் விநாய‌க‌ர் ச‌துர்த்தி ஊர்வ‌ல‌த்திற்கு அனும‌தி அளிக்க‌ கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.

தமிழகம் முழுவதும் பாஜக, இந்துமுன்னணியினர் மற்றும் பலவேறு இந்து அமைப்புகளும், கோயில்களின் வாசல்களிலும் கோயிலுக்கு உள்ளேயும் சென்று பல்வேறு வழிபாடுகளையும், வேண்டுதல்கள் உள்பட பல்வேறு வழிகளில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 10- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள், விநாயகர்சதுர்த்தி விழாவுக்கான தடையை நீக்கக்கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில், இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்த திமுக அரசை கண்டித்தும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி 10க்கும் மேற்பட்டோ,ர் அமைதியான முறையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!