/* */

கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள், இயற்கையை ரசித்து மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப்பயணிகள்
X

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தொடர் விடுமுறை தினத்தை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்த சூழலிலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர்.

காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. கொடைக்கானலில் தற்போது திறக்கப்பட்டுள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு வரிசையில் சில மணி நேரங்கள் காத்து இருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் இதமான சூழலை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர். கொடைக்கானல் தூண்பாறை பகுதியில் அவ்வப்போது மேக மூட்டங்கள் வந்து கண்ணாமூச்சி விளையாடிச் சென்றது, இதையும் சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.



Updated On: 12 Sep 2021 9:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க