கொடைக்கான‌லில் ச‌த‌ம‌டித்த‌ பெட்ரோல் விலை : ரூ.102.59 -க்கு விற்ப‌தால் பொதும‌க்க‌ள் அதிர்ச்சி

கொடைக்கான‌லில்  ச‌த‌ம‌டித்த‌ பெட்ரோல் விலை :  ரூ.102.59 -க்கு விற்ப‌தால் பொதும‌க்க‌ள் அதிர்ச்சி
X

பெட்ரோல் பங்க் மாதிரி படம் 

கொடைக்கானலில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொடைக்கான‌லில் தொடந்து ச‌த‌ம‌டித்த‌ பெட்ரோல் விலை. பெட்ரோல் விலை 102.59 ரூபாய்க்கு விற்ப‌தால் பொதும‌க்க‌ள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொட‌ர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தொடங்கியது.

தற்போது கொடைக்கானலில் அதிக படியாக பெட்ரோல் விலை 102.59 ஆகவும் டீச‌ல் 93.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால் வாடகைக்கு கட்டுப்படி ஆகாமல் திணறி வருகின்றனர். வாடகையை கூட்டினால் வாடிக்கையாளர்கள் வருவது குறையும். தங்களின் அன்றாட தேவைகளை கூட செய்துகொள்ள முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மத் திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது .

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா