பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது திருடிய நபர் கைது

பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது திருடிய நபர்  கைது
X
உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற தூய்மை பணியாளர் பணத்தை திருடி மறைத்து வைப்பது தெரிய வந்தது

திண்டுக்கல் மாவட்டம் , பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் திருடிய நபரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைமீது நடைபெற்று வருகிறது. உண்டியல் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். உண்டியல் எண்ணும் பணி முழுமையாக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற தூய்மை பணியாளர் பணத்தை திருடி மறைத்து வைப்பது தெரிய வந்தது.கோயில் ஊழியர்கள் ராமகிருஷ்ணனை அழைத்துச் சென்று சோதனை செய்ததில் 93100 ரூபாய் பணம் திருடி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பணத்தைப் பறிமுதல் செய்து ராமகிருஷ்ணனை அடிவாரம் காவல் நிலையத்தில் கோயில் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

பணம் திருடி பிடிபட்ட ராமகிருஷ்ணன், பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியில் தற்காலிக தூய்மை பணியாளர் ஆக பணியாற்றி வருகிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமகிருஷ்ணன் இதுபோல ஏற்கெனவே உண்டியல் எண்ணிக்கையில் கலந்துகொண்டு பணத்தை திருடி உள்ளாரா என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story