பழனியில் காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பழனியில் காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால்  பரபரப்பு
X

பழனியில், தபால் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகியால், பரபரப்பு ஏற்பட்டது.

சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப் பட்டதால் வேதனையடைந்து தீக்குளிக்க முயன்றுள்ளார்

பழனியில் தபால் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகியால், பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் நேரு.இவர் ,பழனி தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி வந்து, திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மனம் வேதனையடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.தமிழகத்தில், பல்வேறு இடங்களில், காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், பழனியில் காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயன்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!