பழனியில் பலத்த காற்று:ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனியில் பலத்த காற்று:ரோப் கார் சேவை நிறுத்தம்
X

பலத்த காற்று ,பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Palani Rope Car Service Stopped மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் பழனிமலைக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Palani Rope Car Service Stopped

தமிழகத்தில் இந்த ஆண்டைப்பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையினால் பெருத்த பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்து வந்துள்ளனர். சென்னை புயல் மழையால் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி பல நாட்களுக்கு பின் தானாக வடிந்தது. அதற்கு பிறகு பல நாட்கள் கழித்து தென்மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நான்கு மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களுடைய உடைமைகள் அனைத்தும் வீணாகிப்போனது. இந்நிலையில் பழனியில் பலத்த காற்று வீசியதால் ரோப்கார் சேவையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பகல் பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவில் ,கடுமையான பனிப்பொழிவும், அதிகாலை குளிர்ந்த காற்று வீசுகிறது.

அத்துடன் பகல் நேரங்களில் பலத்த காற்று வீசுவதால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், பழனியில் பலத்த காற்றால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இழுவை ரயில், மூலம் பயணமும்,யானை பாதை வழியாகவும் நடந்து சென்றனர். மேலும், பழனி சண்முக நதியில் நீர் அதிகமாக செல்கிறது.

அத்துடன் , மதுரை வைகை நதியில் பகுதிகளிலும், நீரானது அதிகமாக செல்கிறது.இதனால், மதுரை மாவட்டத்தில் பல கண்மாய்களுக்கு நீர்வரத்து பெருகி உள்ளது.இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் லேசான மழை பெய்தது.தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசுவதால், காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் தொற்றால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!