கொடைக்கானல் பேரிஜம் ஏரியை சுற்றுத் தலமாக மாற்ற எதிர்ப்பு

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை சுற்றுத் தலமாக மாற்ற எதிர்ப்பு

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை ,சுற்றுலாத் தலமாக  மாற்றக்கூடாதென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

பேரிஜம் நன்னீர் ஏரியை மாசுபடுத்தும் வகையில் பரிசல் சவாரியை அனுமதித்த வனத்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து, பெரியகுளம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பேரிஜம் ஏரி வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வந்தது. வனத்துறை அனுமதி இல்லாமல் யாரும் பேரிஜம் ஏரிக்குள் செல்ல முடியாது.

இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் கொடைக்கானல் வருகை தந்த வனத்துறை அமைச்சர் பேரிஜம் ஏரியை சுற்றுலா தலமாக அறவிப்பு செய்து, பரிசல் சவாரியை தொடக்கி வைத்தார். சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்ய ரூ.150 கட்டணத்தை வனத்துறை நிர்ணயம் செய்துள்ளது.

இதனால், பேரிஜம் நன்னீர் ஏரி மாசுபடும் அபாயம் உருவாகியது. வனத்துறையின் இந்த நடவடிக்கை அனைத்து கட்சிகள் நகர்நல அமைப்புகள் பெரியகுளம் நகர்மன்றம், சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் முதல்வர் ஆகியோர் தலையிட்டு கண்டனம் தெரிவித்த பின் பரிசல் சவாரியை 3 -ஆம் தேதி முதல் வனத்துத்துறை நிறுத்தியது

ஆனால், சுற்றுலாதலம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறவில்லை. சுற்றுலா தளம் என்ற அறிவிப்பை,வனத்துறை திரும்ப பெற வேண்டும். பேரிஜம் நன்னீர் ஏரியை மாசுபடுத்தும் வகையில், பரிசல் சவாரியை அனுமதித்த வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்தும் சிபிஎம் சார்பில், வடகரை பழைய பஸ் நிலையம் அருகில் வடகரை கிளை செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை, தொடக்கி வைத்து தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ். வெண்மணி, மாவட்ட செயற்குழு ஆர்.கே. ராமர், தாலுகா குழு ஏ. மன்னர்மன்னன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். இராமச்சந்திரன் பேசினார். ஜி.சுப்பிரமணி நன்றி கூறினார். நிர்வாகிகள் எஸ். கணேசன்,எம்.சங்கர், மஸ்தான், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story