பழனி நகராட்சியில் இளநிலை உதவியாளர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

பழனி நகராட்சியில் இளநிலை உதவியாளர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
X
இவர் தனியார் விடுதியில் மாத வாடகைக்கு ரூம் எடுத்து வசித்து வந்தார்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

பழனி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வெங்கடேஸ்வரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் விடுதியில் மாத வாடகைக்கு ரூம் எடுத்து வசித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு பணியை முடித்துவிட்டு தனது அறைக்கு வந்து தங்கியுள்ளார்.

வெளியே வராமல் இருந்துள்ளார் பணிக்கு வராததால் நகராட்சி ஊழியர்கள் சந்தேகமடைந்து அறைக்குள் சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஸ்வரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடனடியாக பழனி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஊழியர் மர்மச் சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!