காவலர்களை கத்தியால் தாக்கிய நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

காவலர்களை கத்தியால் தாக்கிய  நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சையது இப்ராகிம்

கொடைக்கானல் காவலர்களை கத்தியால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விசாரணைக்கு சென்ற காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற சையது இப்ராகிம் (28) என்பவரை காவல்துறையினர் சோதனைச்சாவடியில் மடக்கிப் பிடித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விசாகன் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறையினர் சையது இப்ராஹிமை குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!