கொடைக்கானலில் விசாரணைக்கு சென்ற போலீசாரை கத்தியால் குத்தியவர் கைது

கொடைக்கானலில் விசாரணைக்கு சென்ற போலீசாரை கத்தியால் குத்தியவர் கைது
X

கொடைக்கானலில் விசாரணைக்குச்சென்றபோது தாக்கப்பட்ட போலீஸார்

விசாரிக்கச்சென்ற போலீஸ்காரர் சின்னசாமியை கழுத்திலும் தடுக்கச் சென்ற சீனிவாசனுக்கும் கையில் காயம் ஏற்பட்டது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விசாரணைக்கு சென்ற 2 போலீசாரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்ட,ம் கொடைக்கானல் தெரசா நகரை சேர்ந்தவர் சையது இப்ராஹிம்(35) . இவர்மீது போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கோயம்புத்தூரில் வசிக்கிறார். மூஞ்சிக்கல் பகுதியில் வழக்கம் போல் மகளிர் காவலர்கள் இருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர், அப்போது மூஞ்சிக்கல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் இல்லாமல் அதிவேகமாக இளைஞர் சென்றார். அப்போது மகளிர் காவலர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர், குடிபோதையில் இருந்த இளைஞரை தையில் வாகனம் இயக்க கூடாது என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது,

அதனை தொடர்ந்து அங்கிருந்த மகளிர் காவலர்கள் வேறு பகுதிக்கு வாகன தணிக்கைக்கு செல்லும் போது, அவர்களை பின் தொடர்ந்த அந்த இளைஞர், மகளிர் காவலர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தினை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் பேசி வாக்கு வாதம் செய்து, இதனை காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்குமாறு எச்சரித்தும், எனது பெயர் சையது இப்ராகிம் என்றும், நான் கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியில் வசிக்கிறேன் என்றும் சினிமா பாணியில் வசனம் பேசி சென்றுள்ளார்

இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் மகளிர் காவலர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சின்னசாமி(45), சீனிவாசன்(38) இருவரும் தெரசா நகர் வீட்டில் இருந்த சையது இப்ராஹிமை விசாரிக்க சென்றனர். அப்போது சையது இப்ராஹிம் இடுப்பில் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் சின்னசாமியை கழுத்தில் தாக்கினார். தடுக்கச் சென்ற சீனிவாசனுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் காயத்துடன் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

தப்பியோடிய சையது இப்ராஹிமை தீவிரமாக தேடி வந்தநிலையில் கொடைக்கானல் மலை அடிவாரம், காமக்காப்பட்டி சோதனை சாவடியில் சுற்றுலா வாகனம் இண்டிகாவை அங்கிருந்த காவலர்கள் சோதனை செய்யும் போது, வாகனத்தில் மறைந்து இருந்த சையது இப்ராகிம் வாகனத்தில் இருந்து இறங்கி காவலர்களை தள்ளி விட்டு மீண்டும் தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்த 3 காவலர்கள் துரத்திப்பிடித்து சையது இப்ராகிமை வளைத்து பிடித்தனர்,மேலும் வாகனத்தில் இருந்த ,சையது இப்ராகிம் மனைவி சஞ்சனா(25) காவலர்களை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது,

இந்த இருவரையும் சுமார் அரைமணி நேரமாக போராடி பிடித்த காமக்காபட்டி சோதனை சாவடி காவலர்கள் சோதனை சாவடியில் பாதுகாப்பாக வைத்திருந்தனர், தகவல் அறிந்து விரைந்த வந்த திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் விசாரணை செய்தனர்.அதன் பின்னர் கணவன்,மனைவி இருவரையும் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கொடைக்கானலுக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் 2 காவலர்களை நேரில் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்து சென்றார்.

Tags

Next Story