பழனி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழனி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து பழனியில், மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில், பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வியாபாரிகளும், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழில் மற்றும் வருமானமின்றி தவிக்கும் நேரத்தில் 100ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்; ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் பெட்ரோல்- டீசலை கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து, கட்சியினர் கோஷமிட்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி