பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
X

 திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

ஜூன் 7 -ல் பள்ளிகள் திறப்பையைட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது

ஜூன் 7 -ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில், கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

கோடைவிடுமுறை முடிந்து 7-ஆம் தேதி திறக்கப்பட இருப்பதால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.பூட்டி கிடக்கும் வகுப்பறைகளில் மலேரியா, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி இருக்கலாம். அதன்மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவ-மாணவிகளை கொசுக்கள் கடித்து தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளி வகுப்பறைகளை திறந்து கொசுக்களை அழிக்கும் வகையில், கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில், உள்ள பள்ளிகளில் கொசுமருந்து அடிப்பதற்கு ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்களை கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியர் பள்ளிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை தொடங்கினர்.

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தன.ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி) விடுமுறை ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு ஏப்ரல் 21, 22-ஆம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும்.ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. பின்னர் கோடை வெயிலின் தாக்கத்தைகருத்தில் கொண்டு ஜூன் 7 - வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

Tags

Next Story