பழனி மற்றும் புறநகர் பகுதி டாஸ்மாக் பார்களில் சட்டவிரோத மது விற்பனை

பழனி மற்றும் புறநகர் பகுதி டாஸ்மாக் பார்களில் சட்டவிரோத மது விற்பனை
X
ஊரடங்கு நேரத்திலும் பழனி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஊரடங்கு நேரத்திலும் பழனி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில் சட்டவிரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக பழனி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும்‌ முழு ஊரடங்கை முன்னிட்டு அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று‌ டாஸ்மாக் பார்கள் முன்பு சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றது.

காலை முதலே பழனி ரயில்வே பீடர் ரோடு, வையாபுரி குளம் டாஸ்மாக் உள்ளிட்ட பார்களிலும், புறநகர் பகுதிகளான சண்முகநதி, கொடைக்கானல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பார்களிலும் சட்டவிரோதமாக சில்லரை மது விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் பொதுமக்களை கண்காணிக்கும் போலீசார் சட்டவிரோத சில்லரை மது விற்பனை செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!