பழனி அருகே வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை அதிகாரிகள்

பழனி அருகே  வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை அதிகாரிகள்
X

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வனப்பகுதியில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை வனத்துறை அதிகாரிகள் தொடங்கினர்

வனவிலங்குகளின் கால் தடங்களையும் சேகரித்து வருவதாகவும் விரைவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படுமென வனத்துறை தகவல்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வனப்பகுதியில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை வனத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி சுமார் 18 ஆயிரம் ஹெக்டர் கொண்ட வனபகுதியாகும் இந்த வனபகுதியில் யானைகள், காட்டு எருமை, மான், புலி , சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

ஆண்டுதோறும் வனவிலங்குகளை வனத்துறை சார்பில் கணக்கிடப்படும் அதேபோல் இந்த ஆண்டும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கொழுமம் வனச்சரக அலுவலர் மகேஸ்வரி தலைமையில் 30 க்கும் மேற்ப்பட்ட வன ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ,ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பழனி அருகே கொழுமம் ,குதிரையாறு அணை, ஆண்டிப்பட்டி காவலப்பட்டி, கூக்கால் , சாமிகானல் ஆகிய வனசரகதிற்குள் 8 நாட்களுக்கு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இதில், வனவிலங்குகளின் கால் தடங்களையும் வனத்துறை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும், விரைவில் எத்தனை வனவிலங்குகள் உள்ளன என அறிவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil