பழனி பகுதியில் பலத்த மழையால் மின்கம்பங்கள் சேதம்

பழனி பகுதியில் பலத்த மழையால் மின்கம்பங்கள் சேதம்
X

மழைக்காற்றால் முறிந்து விழுந்த மரம்

ராமநாதன் நகர் பகுதியில் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது

பழனியில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையால் 30 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

பழனி பகுதியில் மதியம் 3 மணியளவில் திடீரென வானில் மேகக் கூட்டங்கள் திரண்டு சாரல் மழை பெய்யத் தொடங்கி, பின்னர் பலத்த மழையாக மாறியது. இதற்கிடையே மழையின் போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. இதில் ராமநாதன் நகர் பகுதியில் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பங்களும் சாய்ந்தன. அதேபோல் பாலசமுத்திரம், பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுக்கு சுமார் 30 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!