வடமதுரை அருகே முயல் வேட்டையாடிய நபர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

வடமதுரை அருகே முயல் வேட்டையாடிய நபர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்

முயல் வேட்டையாடிய ஐந்து பேருக்கு வனத்துறையினர் அபராதம்.

திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூரில் வேட்டை நாய்களை வைத்து சிலர் காட்டு முயல்களை வேட்டையாடுவதாக வந்த புகாரின் அடிப்படையில், வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வன அலுவலர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முத்து, பழனியாண்டி, மணிகண்டன், கார்த்திகேயன், சுபாஷ், மலையாளம், லோக மணிகண்டன் ஆகியோர் முயல் வேட்டையில் ஈடுபட்டது. தெரிய வந்ததை தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துவுக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற 6 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு டிஆர்இயூ சார்பாக, பழனி டிஆர்யு பொதுச் செயலாளர் கார்த்திக்சங்கிலி தலைமையில் ரயில்வே கேட்டுகளில் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்யாதே, ரயில் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியம் செய்யாதே, நிரந்தர தொழிலாளர்களை கேட் டூட்டியில் இருந்து எடுக்காதே மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், 20 -க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், செல்வராணி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மேற்கு ரத வீதி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு அந்த கடை மற்றும் குடோனில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடை மற்றும் குடோனுக்கு சீல் வைத்து கடையின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil