கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை

கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை
X

கனமழை காரணமாக சிறுமலை 18-வது கொண்டை ஊசி வளைவில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ரெட்டியார் சத்திரம் பகுதியில் மின்னல் தாக்கி இருவர் இறந்தனர்

நத்தம் அருகே பெரிய விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான பஜனை மடம் மீட்பு

திண்டுக்கல், நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பெரிய விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான பஜனை மடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், தாசில்தார் விஜயலட்சுமி (கோவில் நிலம்), நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலெட்சுமி, காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ரூபாய் 1 கோடி மதிப்புள்ளான 7 சென்ட் நிலத்தை பஜனை மடத்தை மீட்டனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 10 பேருக்கு அபராதம்:

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தனர்.

சிறுமலை செல்லும் வழியில் சாய்ந்த மரங்கள்:

கனமழை காரணமாக சிறுமலை 18-வது கொண்டை ஊசி வளைவில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் பிறப்பித்த உத்தரவுபடி, சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழையால், நத்தம்,ரெட்டியார் சத்திரம் பகுதியில் மின்னல் தாக்கி இருவர் இறந்தனர்.

Tags

Next Story